மர்மநபர் ஒருவர் பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை பேசி அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்திலிருக்கும் chur என்ற பகுதியில் இரு மாணவிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இரு மாணவிகளிடமும் ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்து செல்வதற்கு முயன்றுள்ளார். ஆனால் மாணவிகள் மிகவும் தைரியத்துடன் மர்ம நபரிடம் எங்களால் வரமுடியாது என்று கூறிவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தை மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் பள்ளி நிர்வாகம் இதுபோன்ற சூழல் ஏதேனும் உருவானால் எவ்வாறு மாணவிகள் அதனை எதிர்கொள்ள வேண்டுமென்று அறிவுரை கூறியுள்ளனர். மேலும் காவல்துறையினர் மாணவிகள் பள்ளிக்குப் போகும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.