Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கமகம  தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி !!!

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள் :

பிரியாணி அரிசி  – 1 கப்

தேங்காய் – 1

பீன்ஸ்- 5

கேரட் – 1

காலி பிளவர் – தேவைக்கேற்ப

பச்சைப் பட்டாணி – 1/4 கப்

உருளைக் கிழங்கு –  1

பெரிய வெங்காயம் – 2

முந்திரிப் பருப்பு – தேவைக்கேற்ப

கிராம்பு – 3

லவங்கப்பட்டை – 3

ஏலக்காய் – 5

வெள்ளைப் பூண்டு  – 5

நெய் – தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் – 2

உப்பு  – தேவையான அளவு

Coconut Milk க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்துக் கொள்ள  வேண்டும்.  தேங்காயை அரைத்து   பால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் நெய் ஊற்றி கிராம்பு ,லவங்கப்பட்டை ,ஏலக்காய், முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்க  வேண்டும். பின்  2 1/2 கப் தேங்காய் பால் , வேகவைத்த காய்கறிகள் ,  கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசி  மற்றும் தேவையான உப்பு போட்டு  வேக விட வேண்டும். அரிசி  வெந்ததும் கொஞ்ச நேரம் தம் போட்டு மல்லி இலை தூவி இறக்கினால் சூப்பரான கமகம  தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி தயார் !!!

Categories

Tech |