மருத்துவச் சீட்டு இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்துகளை தரக்கூடாது என்று திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று குறைந்திருந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இதனால் அந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாவட்ட ஆட்சியர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூரில் கொரோனா நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகளான அசித்ரோமைசின், ஐவர்மெக்டின் உள்ளிட்ட மருந்துகளை விற்பனை செய்யும் போது, மருத்துவர்களின் பரிந்துரை சீட்டினை பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். எந்த நிலையிலும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.