விருச்சிகம் ராசி அன்பர்களே.! பிரச்சனைகள் இல்லாத நாள்
காலையில் எழும் போது உங்களுடைய குலதெய்வத்தை மனதார வழிபட்டு விட்டு இன்றைய நாளுக்கான வேலையை தொடங்குங்கள். எல்லாம் சிறப்பாக இருக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். பணவரவு கொஞ்சம் தாமதமாகும். எந்த வேலையிலும் முழு கவனம் இருக்கட்டும். அவசரம் வேண்டாம். அலட்சியம் வேண்டாம். எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகிவிடும். நோய் நீங்கி உடலில் ஆரோக்கியம் கூடும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனைகள் பெரிதாக இல்லை. அனைத்தும் சுமுகமாக செல்லும்.
இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கை கொடுக்கும். காதல் இன்பத்தை ஏற்படுத்தும். காதல் திருமணத்தில் போய் முடியக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். மாணவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நல்ல நாள் தைரியம் கூடும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று குருபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் காத்திருக்கின்றது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மெரூன்