Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இது நல்ல ஐடியாவா இருக்கே… இனிமேல் பாதிப்பு இல்ல… செடிகளை பாதுகாக்க புது முயற்சி…!!

மலர் செடிகள் அழுகாமல் பாதுகாப்பதற்காக பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தமிழகம் மாளிகையில் தோட்டக்கலை துறையினர் மலர்  செடிகளை பராமரித்து வருகின்றனர். இந்த மாளிகையின் முன்புறமும், மைதானத்தை சுற்றிலும் மேரிகோல்டு மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதனை தோட்டக்கலை துறை ஊழியர்கள் கவனமாக பராமரித்து வருகின்றனர்.

தற்போது ஊட்டி நகரில் கனமழை பெய்து வருவதால் பராமரிக்கப்பட்ட மலர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மலர் செடிகளை பாதுகாக்கும் பொருட்டு அதன் மீது பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடி உள்ளனர்.

Categories

Tech |