முன்னாள் ராணுவ வீரர் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் பகுதியில் பா. ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பக்கத்தில் முன்னாள் ராணுவ வீரரான பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் பாலமுருகனுக்கு திருமணமாகி தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதன் பின் 2-வதாக அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்த போதும், கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண்ணும் பால முருகனை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் தனது இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்றதற்கு தண்டபாணி தான் காரணம் என்று பாலமுருகன் அடிக்கடி கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் பாலமுருகன் அங்கிருந்த அரிவாளால் தண்டபாணியின் தலை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த தண்டபாணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியமங்கலம் காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.