தந்தை கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் காந்திராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வ அந்தோனி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காந்தி தனது மகன் செல்வ அந்தோணியை வீட்டில் சும்மா இருக்க கூடாது என்று கண்டித்து தோட்டத்திற்கு வேலை செய்ய அழைத்து சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த செல்வ அந்தோனி தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வ அந்தோனி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.