Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீதமுள்ள ஐபிஎல் போட்டியில்…. பேட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் – தினேஷ் கார்த்திக் தகவல் …!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

14 வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு, கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் தற்போது வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் , பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், எஞ்சிய  ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக  தினேஷ் கார்த்திக்  கூறியுள்ளார் .

இதுகுறித்து அவர் கூறும்போது, ” ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் மீதமுள்ள ஐபிஎல் தொடரில் நான் பங்கேற்க மாட்டேன் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். அதோடு அணியின் கேப்டனான மோர்கன் போட்டியில் பங்கேற்பாரா ? என்றால் , ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் 3 மாதங்கள் இருப்பதால், பல விஷயங்கள் மாறலாம் .ஒருவேளை என்னை கேப்டனாக தலைமை தாங்க சொன்னால் , அதற்கு தயாராக இருக்கிறேன் “என்று அவர் கூறினார்.

Categories

Tech |