நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளார். மேலும் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீட் நுழைவு தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .அதில் தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு என்பது உகந்ததாக இருக்காது. எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.