மகரம் ராசி அன்பர்களே.! மனம் உற்சாகமாக இருக்கும்.
இன்று காலை நேரத்தில் உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும். அறிவுபூர்வமான ஆற்றல் இருக்கும். மனம் உற்சாகமாக காணப்படும். அடுத்தவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். வம்பு வழக்குகளில் தலையிடவேண்டாம். சண்டை நடக்க கூடிய இடங்களில் தயவுசெய்து நின்று நீங்கள் வேடிக்கை பார்க்க வேண்டாம். குடும்பத்தை பொறுத்தவரை அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். கணவன் மனைவி இருவருக்கும் அன்பு இருக்கும். பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்காது. இன்று காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் தைரியமாக இருக்க வேண்டும்.
சில நேரங்களில் காதலைப் பற்றிய மனக்குழப்பங்கள் வரும். காதல் நமக்கு கைகூடுமா கூடாதோ என்ற பயம் இருக்கும். ஆனால் காதல் கண்டிப்பாக கைகூடி விடும். மாணவர்களுக்கு இன்றைய நாளில் முடிவுகளில் தெளிவு இருக்கும். கல்வி பற்றிய அக்கறைகளில் தெளிவு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறம் அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்யுங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்