Categories
தேசிய செய்திகள்

ஆதாரத்தை காட்டு ”வழக்கு வாபஸ்” ப.சிதம்பரம் தரப்பு சவால் …!!

ப.சிதம்பரத்தின் வெளிநாட்டில் சொத்து வாங்கியதற்கான ஆதாரத்தை காட்டினாள் வழக்கை வாபஸ் பெறுகின்றோம் என்று ப.சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது.  

ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.அதில் , ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டுவிட்டார். தற்போது அவர் சிபிஐ காவலில் இருக்கின்றார் , விசாரணை நடந்து வருவதால் முன்ஜாமீன் தேவையற்றது என்று முன்ஜாமீனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்து விட கூடாது என்று ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகின்றது. இதில் அமலாக்கத்துறை சார்பில் ஐஎன்எக்ஸ் முறைகேட்டால் ப.சிதம்பரத்திற்கு கிடைத்த பணத்தை வைத்து அவர் பல்வேறு நாடுகளில் சொத்துக்கள் வாங்கியுள்ளார் என்று ஒரு தகவல் சொல்லப்பட்டது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ப.சிதம்பரம் தரப்பு வெளிநாடுகளில் சொத்து வங்கியுள்ளதற்காக ஆதாரத்தை காட்டினால் வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக  தெரிவித்துள்ளது.

Categories

Tech |