மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மும்பை தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலி வாடிக்கையாளர்கள் அனுப்பி போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்திற்கு அதிரடியாக நுழைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டு பின் அங்கு இருந்த இரண்டு பெண்களை மீட்டனர்.
அவர்கள் இருவரும் தென்னிந்திய நடிகைகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் பின் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் விடுவிக்கப்பட்டனர். ஏனென்றால் அந்த நடிகைகள் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்துள்ளனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக தூண்டியுள்ளனர்.
ஆகையால் இந்த தூண்டுதலுக்கு காரணமாக இருந்த ஹசினா மேமன், ஸ்வீட்டி என இரண்டு பெண்கள் மற்றும் விபசார தரகராக விஷால் என்கின்ற சுனில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.