தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஜூன் 7-ஆம் தேதி உடன் முழு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஏற்கனவே இருந்த ஊரடங்கில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணமாகிய நிகழ்வுகளுக்கு இ-பதிவுடன் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அதன் பிறகு அதிலிருந்து திருமண நிகழ்வுகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் திருமணம் குறித்த எந்த புதிய அறிவிப்பும் வராததால் இந்த வாரம் திருமணம் வைத்துள்ள குடும்பத்தினர் குழப்பமடைந்துள்ளனர். இ-பதிவிலையும் திருமணம் தொடர்பாக பதிவு செய்ய முடியவில்லை. திருமணத்திற்கு அனுமதி எப்படி பெற வேண்டும் என்று அரசு அதிகாரிகள் விளக்கம் தரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.