பிரபல பாடகர் மனோ பாடலை கேட்டு எஸ்பிபி அஞ்சலி செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று இவரது 75வது பிறந்த நாளாகும்.
இதையடுத்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் மறைந்த எஸ்பிபி க்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பின்னணி பாடகர் மனோ எஸ்பிபிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் எஸ்பிபி அண்ணனை நினைக்காத இதயமே கிடையாது. நமக்காக அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாம் அனைவரும் அவரது பாடலைக் கேட்போம். பாடல்கள் மூலம் பல பேருக்கு நிம்மதி தருகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.