தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வார்டில் பணியாற்றுவோர், வெளியே பணிபுரிவோர் என்ற பாகுபாடின்றி ஊக்கத் தொகை தர வலியுறுத்தியுள்ளது.