Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வல்லாரைக்கீரை சட்னி அரைப்பது எப்படி !!!

வல்லாரைக்கீரை சட்னி

தேவையான  பொருட்கள் :

வல்லாரைக்கீரை – 1 கட்டு

தக்காளி – 1

தேங்காய் துருவல் –  1/2  கப்

வெங்காயம் – 1

இஞ்சி – சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 8

கடுகு- 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1/4  டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

vallarai keerai க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு கடாயில்  எண்ணெய்   ஊற்றி வெங்காயம்,பச்சை மிளகாய், வல்லாரைக்கீரை, இஞ்சி  மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி தேங்காய் துருவல் சேர்த்து கொள்ள  வேண்டும். பின்  இதனுடன் உப்பு   மற்றும்  தண்ணீர் சேர்த்து அரைக்க  வேண்டும். மற்றொரு கடாயில்  எண்ணெய் சேர்த்து  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை  தாளித்து, அரைத்த விழுதில்  கொட்டினால் சுவையான வல்லாரை சட்னி தயார்!!!

Categories

Tech |