Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை…. டாஸ்மாக் கடைகள் மூடல்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஏற்கனவே ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் ஜூன் 14-ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |