Categories
டெக்னாலஜி

PAN அட்டை புதிதாக விண்ணப்பிக்க…. எளிய வழிமுறை இதோ… படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

PAN கார்டு இல்லாதவர்கள் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இந்தியாவில் ஆதார் அடையாள அட்டைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு PAN அட்டைகளும் மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகும். இப்பொழுது நீங்கள் புதிய பான் அட்டைகளை விண்ணபிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகிவிட்டது. ஏனெனில் இப்பொழுது இந்த ஆவணங்களை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் புதிதாக விண்ணப்பிக்கலாம்.

முக்கியத்துவம்

ஆன்லைன் மூலம் எப்படி இந்த பான் அட்டையை புதிதாக விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம். PAN அட்டை என்பது 10 இலக்கு உடைய ஒரு தனித்துவமான அடையாள எண் ஆகும். இதுவே பான் எண் அல்லது நிரந்தர கணக்கு எண் என்று அழைக்கப்படுகிறது. உங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஒரே அடையாள எண் தான் செல்லுபடியாகும். பான் அட்டையில் பயனரின் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் மட்டுமே இருக்கும், முகவரி இருக்காது.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மூலம் பான் அட்டை விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தியாவின் என்.டி.எஸ்.எல் (NDSL) மற்றும் யு.டி.ஐ.டி.எஸ்.எல் (UTIITSL) வலைத்தளங்கள் மூலம் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். NDSL மற்றும் UTIITSL இரண்டு தளங்களும் இந்திய வருமான வரித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புதிய பான் அட்டை:

புதிய பான் அட்டை விண்ணப்பிக்க NDSL தளத்தை ஓபன் செய்யவும். இந்திய குடிமக்களுக்கான புதிய பான் விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுக்கவும். Individual என்ற வகையைத் தேர்ந்தெடுக்கவும் பெயர்,  பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்கள் மொபைல் எண் போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்து Submit கிளிக் செய்யுங்கள். அடுத்தபடியாக திரையில் இருக்கும் Continue with the PAN Application Form என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

பிறகு உங்களுடைய டிஜிட்டல் e-KYC விபரங்களைச் சமர்ப்பிக்கவும். படிவத்தின் அடுத்த பகுதியில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
படிவத்தின் உள்ள AO வகை மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு Proceed கிளிக் செய்யவும். இப்போது, ​​நெட்பேங்கிங் / டெபிட் / கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்துங்கள்.

16 இலக்க ஒப்புதல் சீட்டுடன் உள்ள acknowledgment slip படிவத்தை Print செய்துகொள்ளுங்கள். acknowledgment slip படிவத்தில் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் போட்டோக்களை இணைக்கவும். படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் Self-Attested படிவத்துடன் இணைக்கவும். இந்த ஆவணங்கள் அனைத்தையும் NSDL முகவரிக்கு அனுப்புங்கள்.

Categories

Tech |