Categories
உலக செய்திகள்

காமா வெடிப்பு நிகழ்வு…. தொலைநோக்கியால் படம் பிடித்த விஞ்ஞானிகள்….!!!!

பிரபஞ்சத்தில் விண்மீன் இறந்து வெடித்து சிதறி காமா கதிர் வெளிப்பட்டதை விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர். GRB 190829A என்ற பெயர் கொண்ட காமா கதிர் கடந்த 2019 ஆம் ஆண்டே வெடிக்கத் தொடங்கியது. பூமியிலிருந்து சுமார் ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தப் பெரு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை ஆய்வு ஜெர்மன் வானியல் ஆய்வாளர்கள் சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு ஏற்பட்ட நட்சத்திரம் ஒன்று இறந்து கருந்துளையாக மாறும் போது இந்த காமா கதிர் வெடிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

இதனை கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டதாக கூறும் அறிவியலாளர்கள், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் அமைக்கப்பட்டுள்ள உயர் ஆற்றல் கொண்ட தொலைநோக்கியின் உதவியுடன் காமா வெடிப்பு படம் பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |