சந்திரமுகி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சொல்லப்போனால் இத்திரைப்படத்தில் மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்திருந்தது என்று கூறலாம். இந்நிலையில் இத்திரைப்படத்தின் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன் படையில் இத்திரைப்படத்தில் ரஜினி நடித்திருந்த சரவணன் கதாபாத்திரத்தில் முதலில் பிரபு நடிக்க இருப்பதாகவும், செந்தில் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மாதவன் நடித்த இருந்ததாகவும் கூறப்படுகிறது, ஆனால் அதன் பிறகு ரஜினி இப்படத்தில் இணைந்ததால் சரவணன் கதாபாத்திரத்தில் அவரும் செந்தில் கதாபாத்திரத்தில் பிரபுவும் நடித்தாக தெரியவந்துள்ளது.