என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன்.
அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் நடத்தினார்.ஒரு எம்.எல்.ஏ. எனது முகத்தில் தாள்ளை வீசி எறிந்தார். எவ்வளவு நாள் தான் நான் இப்படி அடிமையாக இருக்க முடியும்.தற்போது அரசியலால் வெறுப்படைந்து விட்டேன்.பாஜகவை விட மதச்சார்பற்ற ஜனதா தளத்தையே காங்கிரஸ் கட்சி பெரிய எதிரியாய் கருதியது.என்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சித்தராமையா முயற்சி மேற்கொண்டார் இது குறித்து நேரடியாக விவாதிக்க நான் தயார் என்று சவாலும் விடுத்துள்ளார்.