Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் ஏற்பட்ட உயிரிழப்புகள்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உட்பட மூன்று பேர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுவன் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதேபோல் ஆர்.எம்.டி.சி காலனியை சேர்ந்த 60 வயது மூதாட்டியும், பழனியை சேர்ந்த 70 வயது மூதாட்டியும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் 452 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |