Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குழாய் அமைப்பதில் தகராறு…. அதுக்கு இப்படியா பண்ணனும்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் அருகில் குழாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விளம்பூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கோபாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். இதில் கோபாலகிருஷ்ணனுக்கும் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் விஸ்வநாதனின் மகன்கள் சுப்பிரமணியன் மற்றும் முருகன் ஆகியோருக்கு இடையில் வீட்டின் அருகில் குழாய் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் முருகன், சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அருகில் இருப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். ஆனால் அதற்குள் முருகன், சுப்பிரமணியன் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த கடப்பாக்கத்தை சேர்ந்த மகேஷ், ராமாபுரத்தைச் சேர்ந்த தினேஷ், வந்தவாசி தாலுகா கருடபுறம் பகுதியைச் சேர்ந்த செல்வம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து செய்யூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைப்படுத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கோபாலகிருஷ்ணனை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற முருகன், சுப்பிரமணியன் ஆகிய இருவரையும்  வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |