ஊரடங்கின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 21 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் 19 பேர் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்துள்ளனர். மேலும் அதே பகுதியில் 2 பேர் அரசின் உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்தது விற்பனை செய்துள்ளனர்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இருசக்கர வாகனங்களில் சென்ற 19 பேர் மீதும், கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்த 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.