Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல..! நிலைதடுமாறிய லாரி டிரைவர்… எதிர்பாராமல் நடந்த சோகம்..!!

நிலக்கோட்டை அருகே மூலப்பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான செந்தில் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கன்டெய்னர் லாரியில் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த லாரி வெள்ளைதாதன்பட்டியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் லாரிக்குள் சிக்கிய டிரைவரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |