Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுவரை சோதனையில் சிக்கியவை… வெளியான திடீர் அறிவிப்பு… காவல்நிலையத்திற்கு படையெடுத்த கூட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் நேற்று திரும்ப ஒப்படைக்கும் பணி ஆரம்பித்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்த 5,000 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த வாகனங்கள் அனைத்தும் அந்தந்த காவல் நிலையங்களில் காவல்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படவுள்ளதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப வாகன உரிமையாளர்களிடமே ஒப்படைக்கும் பணி நேற்று ஆரம்பித்தது.

இதுகுறித்து தகவலறிந்த வாகனங்களின் உரிமையாளர்கள் காவல் நிலையத்திற்கு படையெடுத்து சென்றனர். அதில் நேற்று ஒரே நேரத்தில் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் ஏராளமானோர் வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக குவிந்துள்ளனர். இதையடுத்து சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

Categories

Tech |