ரயிலில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சோமநாயக்கன்பட்டியிலிருந்து பெங்களூருக்கு ஒரு கும்பல் ரேஷன் அரிசியை ரயில் மூலம் கடத்த முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில், உதவியாளர் அருள், ரயில்வே காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு ரேஷன் அரிசி இருக்கும் மூட்டைகளை 10 பேர் கொண்ட கும்பல் ரயிலில் ஏற்றியதை பார்த்த அதிகாரிகள் அதனை தடுக்க முயன்றபோது கோபமடைந்த அவர்கள் அதிகாரிகளை தாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த கும்பல் ரேசன் அரிசியை ரயிலில் ஏற்றிய பின்பு ரயில் புறப்பட்டதால் அவர்கள் அதில் தப்பிச் சென்று விட்டனர். இவ்வாறு ரேஷன் அரிசியை கடத்துவதை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.