நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவா மாநிலத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் ஜூன் 14-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய பணிகளுக்கான கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படும். மேலும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கட்டப்பட பராமரிப்பு பணிகளுக்காக கடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.