ஊரடங்கு காலத்தில் பூசணிக்காய் வாங்க வியாபாரிகள் முன்வராத காரணத்தினால் விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வடவாளம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் பூசணிக்காயை சாகுபடி செய்துள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் கலியன் என்ற விவசாயி தனது நிலத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாகுபடி செய்யப்பட்ட பூசணிக் காய்களை அதிக விலைக்கு விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது சமையலுக்காகவும், திருஷ்டிக்காகவும் அனைவரும் விரும்பி வாங்க கூடிய இந்த பூசணிக்காயை சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் 1 ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.
ஆனால் ஊரடங்கு காரணத்தினால் பூசணிக்காயை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால் விவசாயிகளுக்கு அதிகப்படியான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயியான கலியன் கூறும்போது 1 ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்சமாக நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.