Categories
உலக செய்திகள்

இதனால் பயண நேரம் குறையும்..! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் விமானங்கள்… பிரபல நிறுவனம் தீவிர முயற்சி..!!

யுனைடெட் ஏர்லைன்ஸ் முதல் கட்டமாக 15 சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒலியை விட அதிவேகமாக செல்லும் திறனுடைய சூப்பர்சோனிக் விமானங்களை பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான முதல் கட்டமாக 15 புதிய சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 2029-ஆம் ஆண்டு இந்த விமானமானது பயன்பாட்டிற்கு வரும் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அட்லாண்டிக் வழித்தடத்தில் இந்த விமானம் மூலம் பயணித்தால் பயண நேரமானது மிகக் குறைவாக இருக்கும் என்றும், நியூயார்க் நகருக்கு லண்டனிலிருந்து 3.5 மணி நேரத்தில் இந்த விமானம் மூலம் சென்று விடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த விமானங்கள் யுனைடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தயாரிக்க உள்ளதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1976-ஆம் ஆண்டு பயணிகள் விமான சேவையில் நுழைந்த கான்கார்டு சூப்பர்சோனிக் விமானங்கள் அனைத்தும் 2003-ஆம் ஆண்டு தரையிறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த விமானங்களால் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் ஆகியவை 2003-ம் ஆண்டு அனைத்து கான்கார்டு விமானங்களுக்கும் ஓய்வு வழங்கியுள்ளது. இதையடுத்து யுனைடெட் ஏர்லைன்ஸ் அத்தகைய விமானங்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குவதற்கான பணிகளை தற்போது ஆரம்பித்துள்ளது.

Categories

Tech |