இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் காளி திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Happy to Announce my next!
Produced by @riseeastcre @PentelaSagar
Starring @kalidas700 & @actortanya
DOP @RichardmnathanMore to come 😇@teamaimpr pic.twitter.com/ht0QsGIev3
— kiruthiga udhayanidh (@astrokiru) June 6, 2021
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கருப்பன் படத்தில் நடித்து பிரபலமடைந்த தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.