Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த மனைவியை பாத்ரூமில் அடைத்து… தனிமைபடுத்திய கணவன்… காவல்துறை செய்த காரியம்…!!!

கொரோனா பாதித்த மனைவியை 5 நாட்களாக குளியல் அறையில் தங்க வைத்த கணவனுக்கு காவல் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம், மஞ்சிரியாலா என்ற பகுதியை சேர்ந்த பெத்தய்யா என்பவரின் மனைவி நரசம்மா. கடந்த 5 நாட்களுக்கு முன்பு நரசம்மாக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என்று கூறிய கணவன் குளியலறையில் அவரை தங்க வைத்துள்ளார். கழிவறை கூட வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் வெளியிலேயே அவரை தங்க வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இவர் படும் இன்னல்களை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது கணவனுக்கு ஆலோசனை கூறி பின்னர் வீட்டில் தனியறையில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்தனர். கொரோனா பாதித்தவர்கள் தனிமைப்படுத்த வேண்டியவர்களே தவிர புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Categories

Tech |