Categories
உலக செய்திகள்

“பயங்கரம்!”.. ஒரு தேர்தலுக்காக நடந்த 782 வன்முறை சம்பவங்கள்.. 89 அரசியல்வாதிகள் கொலை..!!

மெக்சிகோவில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் சமயத்தில் தற்போதுவரை அரசியல்வாதிகள் 89 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் இடைத்தேர்தலுக்காக 200 நாட்களாக நடந்து வந்த பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடத்தப்படவுள்ளது. இதில் மாகாண ஆளுநருக்கான 15 பதவி உட்பட சுமார் 20,000 பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த 200 நாட்கள் பிரச்சாரத்தில் 35 வேட்பாளர்கள் உட்பட சுமார் 89 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் தாக்குதல் சம்பவங்களும் 782 ஆக பதிவாகியுள்ளது. மேலும் பொருட்களை சேதப்படுத்துதல், கடத்தல்கள், குடும்பத்தினர் மீதான வன்முறை தாக்குதல் போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 75% எதிர்க்கட்சியினர் மீது நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் தான் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த அரசியல்வாதிகள் தான் குறிவைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்த பொதுத் தேர்தலின் போதும் 774 கலவர சம்பவங்கள் பதிவானது. அதில் அரசியல்வாதிகள் 152 பேர் கொலை செய்யப்பட்டனர். கடந்த 2015ம் வருடம் இடைத்தேர்தலின் போதும் 61 அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |