தொகுப்பாளினி ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பலோயர்களை பெற்றுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின் . இவர் இதற்கு முன் கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதன்பின் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். மேலும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கோலமாவு கோகிலா படத்தில் ஜாக்குலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
தற்போது ஜாக்குலின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘தேன்மொழி பி.ஏ’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஜாக்குலின் தனக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.