Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : நடால், ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 3வது சுற்று போட்டியில் ஜோகோவிச் ,ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறினர் .

‘கிராண்ட்ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்  3 வது சுற்று போட்டியில், நடப்பு சாம்பியனான ரபேல் நடால் , இங்கிலாந்து வீரரான  கேமரான் நோரியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ,இறுதியாக  ரபெல் நடால் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில், வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதற்கு முன் நடந்த மற்றொரு போட்டியில் செர்பிய வீரரான நோவாக் ஜோகோவிச், லிதுவேனியா வீரரான ரிச்சர்ட்சை 6-1, 6-4, 6-1  என்ற செட் கணக்கில் தோற்கடித்து  4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Categories

Tech |