Categories
மாநில செய்திகள்

உதவித்தொகை திட்டத்தை…. மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க…. ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் இரண்டாவது தவணை ஜூன்-15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் ரவிக்குமார் எம்பி, .தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மே, ஜூன் மாதங்களில் மாதம் இரண்டாயிரம் என 4000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இது வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு பேருதவியாக உள்ளது. இன்னும் பேராபத்தில் இருந்து விலகாத நிலையில் அந்த திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |