திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவராக நடிகை சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது.
இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவராக சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து பொதுச்செயலாளராக அபிஷேக் பானர்ஜி, கலாச்சாரப் பிரிவு தலைவராக இயக்குனர் ராஜ் சக்கரபோர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொதுச் செயலாளராக குணால் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.