Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இன்னொரு போதை ஊசி வேணும்” நண்பரின் கொடூர செயல்… கோவையில் பரபரப்பு…!!

போதை ஊசியினால் நடந்த தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போடிபாளையம் பகுதியில் ஜீவானந்தம் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் போடிபாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் போதை ஊசி போடும் பழக்கத்திற்கு அடிமையான ஜீவானந்தம் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அதனை வாங்கி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த போதை ஊசியை மணிகண்டன் ஜீவானந்தத்திற்கு செலுத்தியுள்ளார். அப்போது ஜீவானந்தம் மீண்டும் ஒரு போதை ஊசி வேண்டும் என்று மணிகண்டனிடம் கூறியுள்ளார். மேலும் உன்னுடைய செல்போனை விற்று ஒரு போதை ஊசி வாங்கி வா என்று மணிகண்டனை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஜீவானந்தத்தை சரமாரியாக வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து நடந்த அனைத்தையும் கூறி காவல் நிலையத்தில் மணிகண்டன் சரண் அடைந்து விட்டார். அதன்பின் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ஜீவானந்தத்தின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |