கல்வான் எல்லை பகுதியில் இந்திய மற்றும் சீன படையினர் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது.அந்த சூழ்நிலையில் சீனாவுக்கு எதிராக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை இணைத்து அமெரிக்கா உருவாக்கிய குவாட் அமைப்பில் இந்தியாவும் இணைந்தது. தற்போது இது பற்றி பேசிய ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் பொறுப்பான தலைவர்கள். இந்தப் பிரச்சனையில் வேறு யாரும் தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் இந்த பிரச்சனை இன்னும் தீர்வுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. அதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
Categories