Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு கொடுத்தோம்…. கால்நடைகளுக்கு சிகிச்சை பெற…. இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்…!!

கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து வரும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வைத்திருக்கும் மாடுகளுக்கு 10 டன் வைக்கோலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் இருந்து பல்வேறு வகையான பொருட்களை ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வளர்த்து வரும் மாடுகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்து அவர் மிருகவதை தடுப்பு சங்க துணைத்தலைவர் அனுஷா செல்வத்திடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அனுஷா செல்வம் 50 மாடுகளுக்கு 10 டன் வைக்கோலை முள்ளிபாளையம், சேண்பாக்கம், கல்புதூர், காட்பாடி பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு பிரித்து வழங்கியுள்ளார். இதேபோன்று குதிரை தொழிலாளர்கள் வைத்திருக்கும் குதிரைகளுக்கு 700 கிலோ கோதுமை தவிடும், தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதற்காக 500 கிலோ அரிசியும் அனுஷா செல்வம் கொடுத்துள்ளார். இவ்வாறு கால்நடைகளுக்கு உதவி செய்ய விருப்பம் இருப்பவர்கள் மற்றும் கால்நடைகளுக்கு சிகிச்சை தொடர்பாக உதவி தேவைப்படுவோர் 9486963673 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |