Categories
அரசியல் தேசிய செய்திகள்

5 நாள் சிபிஐ காவல்முடிந்த நிலையில் ப.சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்…!!

5 நாள் சிபிஐ  காவல் முடிந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

இதில் மேலும் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. முன்னதாக அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை வரை கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிஐ நீதிமன்றத்தில் எந்த மாதிரியான உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |