Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. தமிழக அரசு கடும் உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்புச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு கையூட்டு பெற்றால் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ் பெற பலரும் கையூட்டு பெறுவதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |