Categories
தேசிய செய்திகள்

20 நிமிடத்தில் உத்தரவு….. வீடா…? சிறையா…? சிதம்பரம் திக் திக்……!!

ப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ  காவலை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று கோரிய வழக்கில் இன்னும் 20 நிமிடங்களில் சிறப்புநீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க இருக்கின்றது.  

ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுத்தியது. இதில் சிபிஐ தரப்பில் மேலும் 5 நாட்கள் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென்று வாதிட்டது.

Image result for pchidambaram vs cbi

அப்போது நீதிபதி , 5 நாள் காவலில் இருக்கும்போது என்ன விசாரணை நடத்தப்பட்டது? இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரத்தை சிபிஐ தெளிவாக விளக்க வேண்டும் என்றார். அதற்கு , மின்னஞ்சல் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன சிபிஐ வெளிநாட்டு வங்கி கணக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தான் விசாரிக்கும் என்று சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Image result for pchidambaram vs cbi

எந்த ஆவணத்தையும் காட்டாமல் ஆவணத்தின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் கூறுவது எப்படி என்று கபில் சிபில் கேள்வி எழுப்பினார். சிபிஐ ஏதோ சில துண்டு சீட்டுகளை காட்டிவிட்டு ஆதாரம் என்கிறார்கள். உண்மையான ஆதாரம் இருந்தால் கொடுக்கலாமே , ஆதாரங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு சிபிஐ மறுப்பது ஏன் என்று ப.சிதம்பரம் சார்பில் கபில் சிபில் வாதங்களை எடுத்து வைத்தார்.

Image result for pchidambaram vs cbi

மேலும் அடிப்படை ஆதாரங்களை கொடுத்துவிட்டு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காவல் நீட்டிப்பு கேளுங்கள்  என்று கபில் சிபில் வாதிட்டார். வாதம் , பிரதி வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் சிபிஐ_யின் 5 நாள் காவல் நீட்டிப்பு தொடர்பாக 20 நிமிடங்களில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து ஒத்திவைத்துள்ளார்.

Categories

Tech |