Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாளை முதல் மீண்டும்… அரசு சற்று முன் அறிவிப்பு…!!!

புதுக்கோட்டை புதிய பேருந்து லிட்டில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் நாளை முதல் தமிழக அரசு, தமிழகத்தில் சில தளர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் தொற்று குறையாத மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் உழவர் சந்தை, பெரிய மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் வழக்கம் போல் அந்த இடங்களில் இயங்கும், மக்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |