வாணியம்பாடி அருகில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசவத்திற்காக சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வாணியம்பாடி மற்றும் நெக்குந்தி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது.
அப்போது பரமேஸ்வரன் நனைந்தபடி வீட்டிற்கு வந்து மின் விளக்கு சுவிட்சை போட்டதால் மின்சாரம் தாக்கி பரமேஸ்வரன் தூக்கி எறியப்பட்டார். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் பரமேஸ்வரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரமேஸ்வரனை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.