கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்ததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான முட்டைகள் நாசமாகிவிட்டது.
சேலம் மாவட்டம் பட்டுத்துறை பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் சங்கராபுரம் பகுதிக்கு 36 ஆயிரம் முட்டைகளை சரக்கு வேனில் ஏற்றுக் கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கோகுல்ராஜ் சரக்கு வேனை வலது புறம் திருப்ப முயற்சி செய்துள்ளார்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேனானது சாலையில் கவிழ்ந்ததால் அதில் ஏற்றிச்சென்ற 36 ஆயிரம் முட்டைகளும் உடைந்து நாசமாகிவிட்டது. ஆனால் இந்த விபத்தில் கோகுல்ராஜும் அவருக்கு உதவியாளராக சென்ற மற்றொருவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு வேனை அப்புறப்படுத்தி உள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.