அமெரிக்காவில், ஊரடங்கு காலகட்டங்களில் துப்பாக்கி பயன்படுத்துவதும், துப்பாக்கி சூடு தாக்குதல்களும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், பொது முடக்கதினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதால் குற்றச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதாக கருதப்படுகிறது. அதன்படி அமெரிக்காவில் உள்ள இண்டியனாபொலிஸ் என்ற நகரில் அதிகாலை 2 மணியளவில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.
மேலும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களின் உடல்நிலை நன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.