Categories
மாநில செய்திகள்

மேலும் 3 மாதங்களுக்கு… ரூ. 2000 நிவாரணம் வேண்டும்… ரவிக்குமார் எம்பி கோரிக்கை…!!!

கொரோனா நிவாரண நிதியாக மேலும் மூன்று மாதங்களுக்கு மாதம்தோறும் 2 ஆயிரம் வழங்க வேண்டும் என ரவிக்குமார் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததையடுத்து தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

முதல் தவணையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா பெரும்தொற்று இன்னும் நீங்காத காரணத்தால், மேலும் மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |