Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் – பிஎஸ்எல் லீக் தொடர்களை ஒப்பிட்டு…. டு பிளிஸ்சிஸ் கருத்து…!!!

ஐபிஎல்  மற்றும் பிஎஸ்எல் தொடர்களை ஒப்பிட்டு டு பிளிஸ்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக டு பிளிஸ்சிஸ் விளையாடி  வருகிறார். அத்துடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காகவும் ,இவர் விளையாடி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிஎஸ்எல் போட்டி, வருகின்ற 9 ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டு பிளிஸ்சிஸ் விளையாட உள்ளார். இந்நிலையில்  ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் இரண்டையும் ஒப்பிட்டு டு பிளிஸ்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் காணப்படுகின்றனர்.

அவர்களின் பந்துவீச்சு என்னை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதில் ஏராளமான வீரர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் , பந்து வீசுவது  எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் நடக்கும்  ஐபிஎல் தொடரில் ஏராளமான சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் .ஐபிஎல் தொடர் சிறப்பாக  நடந்து  கொண்டிருந்தது. பயோ-பபுள் பாதுகாப்பிற்குள் ,எந்த ஒரு பிரச்சினையும் வரவில்லை. அதன்பின் போட்டிக்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது,  கொரோனா வைரஸ் தொடருக்குள் நுழைந்து விட்டதாக கருதுகிறேன்’’ என்று அவர் கூறினார் .

Categories

Tech |