இருசக்கர வாகனத்தின் சக்கிரத்தில் துப்பட்டா சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பந்தல்மேடு கிராமத்தில் கூலித்தொழிலாளியான கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல் மாரி என்ற மனைவியை இருந்துள்ளார். இந்நிலையில் வேல் மாரியின் தங்கைக்கு குழந்தை பிறந்ததால், குழந்தையை காண்பதற்காக மகிழ்ச்சியுடன் தனது பெற்றோரின் ஊரான தெற்கு கிடாரகுளத்துக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இரவு நேரத்தில் வேல்மாரி தனது தங்கை கணவருடன் மோட்டார் சைக்கிளில் பந்தல்மேடு கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது வேல் மாரியின் துப்பட்டாவானது இருசக்கர வாகனத்தின் பின்புற டயரில் சிக்கிக் கொண்டது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த வேல் மாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் வேல் மாரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.